கொரோனா நோயாளியின் குமுறல்
அப்ப சொல்லேக்க கேட்கேல நான்.
சுத்தம் சுகம் தரும் என்டு சொன்னீங்கள்
நான் சத்தம் போடாம இருந்தன்.
கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்டீங்கள்
நான் கசக்கியெறிஞ்சிட்டு போனன் .
கூழானாலும் குளித்துக் குடி என்டியள்.
கூழை விட கள்ளுத் திறம் என்டு போனன்.
கள்ளும் தெவிட்டும் என்டான் ஒருத்தன்
அப்ப கள்ளச்சாராயம் நல்ல தெண்டு போனன்.
கடைசியில நான் பாடையில போறதுக்கு
நானே பத்திரம் எழுதிப் போட்டன்.
இதையெல்லாம் செய்து என்ர உடம்ப
நானே உருக்குலைச்சுப்போட்டன்.
கொரோனா என்ன சும்மா தடிமன் வந்தாலே
எனக்கு பாடை கட்டிடலாம்.
கடைசியாய் சொன்னாங்கள்
அப்பவும் கேட்கேல நான்.
channel channel ஆ கத்தினாங்கள்.
கைகழுவ நேரமெல்லாம் விட்டாங்கள்.
ஏன் ஊரை அடக்கி ஊரடங்கு எல்லாம் போட்டாங்கள்.
அப்ப கூட என்ற அறிவு கேட்கேல பாருங்கோ.
"கோதாரி விழுவான் கை கழுவு என்டா கேட்கிறியேடா?
நீ துலையிறதோட எங்களையும் எல்லே
கொண்டுபோய் துலைக்கப் போறாய்.
பாடையில போறவனே பத்து நிமிசம் கைகழுவினால்
உனக்கு என்ன குடியே முழுகப் போகுது."
அம்மா பேசுறது கேட்குது....
என்ர உயிரும் போகுது......
கொரோனா கொண்டுபோகுது.
பாடையிலயும் தூக்க மாட்டாங்கள்......
கொல்லியும் வைக்கமாட்டாங்கள்.....
அநாதைப் பிணமா அழுகத்தான் போறன்.....
கொரோனா எனக்கு தந்தது உங்களுக்கு வேண்டாம்.
பழமொழிகள் எல்லாம் எனக்கு
செம்மொழியாய் தெரியுது இப்ப...
கேட்டு நடவுங்கோ...
மூதாதையர் சொன்னது மூட நம்பிக்கை என்ட
முட்டாள் பேச்ச கைவிட்டிடுங்கோ......
போதை என்ட மாயைக்குள்ள சிக்கிடாதேங்கோ.....
கை,கால், முகம் கழுவி சுத்தமா இருங்கோ.....
"கொரோனா"ட்ட இருந்து தப்பிச்சிடுங்கோ...
நான் போறன்.
- கம்பு-
Friday, April 24, 2020
Subscribe to:
Comments (Atom)

